என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி மர்ம மரணம்"
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள மைக்கேல்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் பிரிட்டோ (வயது 42) இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் தங்கைய்யா நகரைச் சேர்ந்த ரோசி (41) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மாத்தூரில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சேவியர் பிரிட்டோ தன் தாய் வீடான மைக்கேல் பட்டிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மைக்கேல்பட்டியில் வயலுக்கு சென்ற சேவியர் பிரிட்டோ மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
தகவல் அறிந்து மாத்தூரில் இருந்து மைக்கேல்பட்டி வந்த ரோசி கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் அருகே உள்ள செறுகோல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜகுமார் மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் மீன் இறக்கும் வேலை பார்த்து வந்தார். இதேபோல நேற்று காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு ராஜகுமார் மார்த்தாண்டம் சென்றார். திடீரென மார்த்தாண்டத்தில் இருந்து ராஜகுமாரின் மனைவிக்கு ஒருவர் செல்போனில் பேசினார். உங்கள் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டார். அவரது உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ராஜகுமாரின் மனைவியும், உறவினர்களும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். அங்கு ராஜகுமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவர் எப்படி திடீரென இறந்தார் என தெரியவில்லை. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காட்டில் முதியவர் ஒருவர் நேற்று மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் வீரணன் (வயது 56). இவர் திருமங்கலம் தொழிற்பேட்டையில் உள்ள மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணியில் இருந்த வீரணன் தொழிற்சாலை வளாகத்துக்குள் இறந்து கிடந்தார். இன்று காலை தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்தவர்கள் வீரணன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வீரணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீரணன் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.
அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சிறு குன்றா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் மில்லர் (52). இவரது மனைவி லில்லி விக்டோரியா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
ஜார்ஜ் மில்லர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் எஸ்டேட் அலுவலகத்துக்கு சம்பளம் வாங்க சென்றுள்ளார்.
அப்போது இவருக்கும் எஸ்டேட் அதிகாரிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இருவரும் சேர்ந்து ஜார்ஜ் மில்லரை சரமாரியாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அவர் வால்பாறை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜார்ஜ் மில்லர் மனைவி தனது கணவரை எஸ்டேட் பீல்டு ஆபீசர் ரமேஷ் குமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தாக்கியதாகவும் அதில் தான் தனது கணவர் இறந்ததாகவும் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து எஸ்டேட் அதிகாரிகள் ரமேஷ் குமார், முத்துக்குமார் ஆகியோரிடம் வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜார்ஜ் மில்லர் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்